By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்
அரசியல்மாநிலம்

முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

Last updated: May 28, 2024 11:48 am
May 28, 2024
163 Views
Share
SHARE

சென்னை: 

“புது­மைப்­பெண் திட்­டத்­தால், கல்­லூ­ரி­க­ளில் சேரும் மாண­வி­யர்­க­ளின் எண்­ணிக்கை 34 சத­வீ­தம் உயர்வு, முதல் தலை­முறை பட்­ட­தாரி மாணாக்­கர்­க­ளுக்கு கல்­விக் கட்­ட­ணச் சலு­கைக்­காக ரூ.1,000 கோடி, ரூ.1000 கோடி செல­வில் காம­ரா­ஜர் கல்­லூரி மேம்­பாட்­டுத் திட்­டம், ரூ.150 கோடி செல­வில் உயர்­கல்வி நிறு­வ­ன ங்­க­ளில் டிஜிட்­டல் முறை­யில் ஒருங்­கி­ணைந்த கற்­றல் மேலாண்மை அமை ப்பு, ரூ.63 கோடி செல­வில் சென்னை மாநி­லக் கல்­லூ­ரி­யில் கலை­ஞர் அரங்­கம்” என்று உயர்­கல்­வித் துறை செய்­துள்ள சாத­னை­களை தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்­ளது.

திமுக ஆட்­சிக்கு வந்து 3 ஆண்­டு­கள் நிறை­வ­ டைந்­துள்ள நிலை­யில் கடந்த சில நாட்­க­ளாக முதல்­வர் ஸ்டாலின் தலை­மை­யி­லான ஆட்­சி­யில் ஒவ்­வொரு துறை­யும் சாதித்து வரும் சாத­னை­க­ளின் புள்ளி விவ­ரங்­களை தமி­ழக அரசு வெளி­யிட்டு வரு­கி­றது. அதன்­படி, இன்று உயர்­கல்­வித் துறை­யில் திமுக அரசு செய்­துள்ள பணி­கள் மற்­றும் சாத­னை­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அந்த செய்­திக்­கு­றிப்­பில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது: “உலக அள­வில் இளை­ஞர்­களை அதி­கம் கொண்­டுள்ள இந்­தி­யத் திரு­ நாட்­டில் குறிப்­பாக, தமி­ழ­க த்­தில் உள்ள இளை­ஞர்­கள் முன்­னேற்­றம் காண மிக­வும் இன்­றி­ய­மை­யா­தது உயர்­கல்­வி­யா­கும். அர­சி­னால் வழங்­கப்­ப­டும் உயர்­கல்­வி­யின் வாயி­லா­கவே இளை­ஞர்­க­ளின் வாழ்க்­கை­யில் ஏற்­றத்­தி­னை­யும் முன்­னேற்­றத்­தி­ னை­யும் கொண்டு வர இய­லும் என்­பதை கருத்­தில் கொண்டு, திரா­விட மாடல் ஆட்­சி­யில் கடந்த 3 ஆண்­டு­க­ளில் உயர்­கல்­வித் துறை­யின் சார்­பில் எண்­ணற்ற நல்­ல­பல திட்­டங்­கள் திறம்­பட செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக, இளை­ஞர்­க­ளுக்கு தொழில் சார்ந்த திறன்­களை வழங்­கி­டும் நான் முதல்­வன் திட்­டம், மாண­வி­கள் உயர்­கல்­வி­யினை தொய்­வின்­றித் தொடர மாதந்­தோ­றும் 1000 ரூபாய் வழங்­கி­டும் புது­மைப்­பெண் திட்­டம், மாண­வர்­க­ளுக்­கான தொழில் திறன் மேம்­பாட்­டுத் திட்­டம், முத­ல­மை ச்­ச­ரின் ஆராய்ச்சி மானி­யத் திட்­டம், முத­ல­மைச்­ச­ரின் ஆராய்ச்சி ஊக்­கத் தொகை திட்­டம், மாண­வர்­க­ளின் கல்­வித் தேவையை நிறைவு செய்­யும் உங்­க­ளைத் தேடி உயர்­கல்வி உள்­ளிட்ட பல திட்­டங்­க­ளால் தமி­ழ­கத்­தில் உயர்­கல்­வித் தரத்­தி­லும், அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளும் மேம்­ப­டுத்­தப்­பட்டு இந்­தி­யா­வி­லேயே முதன்மை மாநி­ல­மா­க­வும் முன்­னணி மாநி­ல­மா­க­வும் திகழ்ந்து வரு­கி­றது.

உயர்­கல்வி சேர்க்­கை­யில் இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாடு முத­லி­டம்: கரு­ணா­நிதி ஆட்­சிக்­கா­லம் தொட ங்கி இன்று வரை­யில் தமி­ழ­கத்­தில் உயர்­கல்வி பயி­லும் மாண­வர்­க­ளின் நல­னின் அதிக அக்­க­றைக் கொண்டு குறி ப்­பாக கிரா­மப்­பு­றங்­க ­ளில் பயி­லும் ஏழை எளிய மாண­வர்­கள் உயர்­கல்வி பெற்­றி­டும் வகை­யில், மாண­வர் சேர்க்­கை­யில் இட ஒதுக்­கீடு, முதல்­த­லை­முறை பட்­ட­தா­ரி­க­ளுக்கு இல­வ­சக் கல்வி, பட்­டி­ய­லின மாண­வர்­க­ளுக்­கும் இல­வ­சக் கல்வி, பிற்­ப­டுத்­தப்­பட்ட, மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட மாண­வர்­க­ ளுக்கு ஊக்­கத்­தொகை உள்­ளிட்ட பல திட்­டங்­க­ளை ­யும், அடிப்­ப­டைக் கட்­ட­மைப்பு வச­தி­க­ளை­யும் தொடர்ந்து உரு­வாக்­கி­ய­தன் பய­னாக இன்று இந்­தி­யா­வி­லேயே அதிக அள­வி­லான அர­சுப் பல்­க­லைக்­க­ழ­ கங்­க­ளும் 500க்கும் மேற்­பட்ட தரம் வாய்ந்த பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளும், அதிக அள­வி­லான மருத்­து­வக் கல்­லு­ரி­க­ளும், புகழ்­பெற்ற 100 உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளில் 31 உயர்­கல்வி நிறு­வ­ன ங்­க­ளும் தமிழ்­நாட்­டில் அமை­யப்­பெற்று தர­மான கல்­வி­யினை மாண­வர்­க­ளுக்கு வழங்கி தமி­ழ­கம் முதன்மை மாநி­ல­மா­கத் திகழ்­கி­றது.

அகில இந்­திய உயர்­கல்வி ஆய்வு நிறு­வ­ னத்­தின் (AISHE) கூற்­றுப்­படி உயர்­கல்வி மாண­வர் சேர்க்­கை­யில் (GER) 49% பெற்று இந்­திய அள­வில் தமி­ழ­கம் முத­லி­டம் பெற்­றுள்­ளது. இது அகில இந்­திய சரா­சரி சத­வி­தத்­தைக் காட்­டி­லும் இரண்டு மடங்கு அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தா ­கும். தமி­ழக முதல்­வ­ரின் தொலை­நோக்­குப் பார்­வை­யில் உதித்த நான் முதல்­வன் திட்­டம், புது­மைப்­பெண் திட்­டம் உள்­ளிட்ட பல திட்­டங்­க­ளி­ னால் உயர்­கல்­வி­யில் குறிப்­பாக மாண­வி­க­ளின் சேர்க்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது பாராட்­டத்­தக்க ஒன்­றா­கும்.

புது­மைப் பெண் திட்­டம்: அர­சுப் பள்­ளி­க­ளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று இடை­நிற்­றல் இன்றி உயர்­கல்வி பயி­லும் அனைத்து மாண­வி­க­ளுக்­கும் மாதந்­தோ­றும் 1,000 ரூபாய் வழங்­கும் மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார் நினைவு உயர்­கல்வி உறு­தித் திட்­டம் எனும் புது­மைப் பெண் திட்­டம் 6.9.2022 அன்று தொடங்­கப்­பட்டு, 2 இலட்­சத்து 73 ஆயி­ரம் மாண­வி­க­ளுக்கு மாதம் 1,000 ரூபாய் வங்கி கணக்­கில் வரவு வைக்­கப்­பட்டு பய­ன­டை­கின்­ற­னர்.

இந்­தி­யா­விற்கே வழி­காட்­டி­டும் இந்த புது­மைப் பெண் திட்­டத்­தி­னால் அர­சுப் பள்­ளி­க­ளில் பயின்று கல்­லூ­ரி­க­ளில் சேரும் மாண­வி­யர்­க­ளின் எண்­ணிக்கை 34 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்க ஒன்­றா­கும்.

நான் முதல்­வன் திட்­டம்: இன்­றைய இளை­ஞர்­க­ளின் கன­வினை நிறை­வேற்­று­கின்ற வகை­யில் இது­வ­ரை­யில் எந்த மாநி­லத்­தி­லும் இல்­லாத வகை­யில் முதல்­வர் மு.க. ஸ்டாலி­னின் தொலை­நோக்­குப் பார்­வை­யில் உதித்­தத் திட்­டமே நான் முதல்­வன் திட்­ட­மா­கும். தமி­ழ­கத்­தின் உயர்­கல்­வி­யின் மாண­வர் சேர்க்­கை­யினை அடுத்த வரும் மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் 100 சத­வி­தம் இலக்­கினை எட்ட வேண்­டும் என்­கின்ற உய­ரிய நோக்­கில் உதித்த இந்த திட்­டத்­தின் வாயி­லாக, உயர் நிலைப்­பள்­ளி­யில் பயி­லும் மாண­வர்­க­ளுக்­குத் தேவை­யான தக­வல்­களை குழு­வின் மூலம் வழங்கி வழி­காட்­டு­தல், மாண­வர்­கள் தங்­க­ளின் சொந்த ஆர்­வங்­க­ளை­யும் திறன்­க­ளை­யும் தொடக்க நிலை­யி­லேயே கண்­ட­றிந்து அவர்­க­ளின் தொழில் வாழ்க்­கைக்கு வலு­வான அடித்­த­ளம் அமைத்­தல். மேலும், பட்­டப்­ப­டிப்பு முடிக்­கும் வரை தடை­யற்ற உயர்­கல்­விக்கு தேவை­யான அனைத்து வச­தி­க­ளை­யும் உறுதி செய்­வதே இத்­திட்­டத்­தின் சிறப்பு அம்­சங்­க­ளா­கும்.

அந்த வகை­யில் கடந்த 2022 -ல் முதல்­வ­ரால் தொடங்­கப்­பட்ட இந்த திட்­டத்­தின் வாயி­லாக இது­வ­ரை­யில் 27 இலட்­சம் மாண­வ ர்­கள் பய­ன­டைந்­துள்­ள­னர். இத்­திட்­டத்­தி­னால் பயிற்சி பெற்ற 1 இலட்­சத்து 84 ஆயி­ரம் இளை­ஞர்­க­ளில் 1 இலட்­சத்து 19 ஆயி­ரம் பேர் வேலை­வாய்ப்­புப் பெற்று மகத்­தான சாதனை நிகழ்த்­தப்­பட்­டுள்­ளது இத்­திட்­டத்­திற்­கான மாபெ­ரும் வெற்­றி­யா­கும்.

உயர் சிறப்பு மையங்­க­ளா­கும் உயர் கல்வி நிறு­வ­ன ங்­கள்: உயர்­கல்வி நிறு­வ­னங்­க ளை உயர்­சி­றப்பு மை யங்­க­ளா­கத் தரம் உயர்த்­து­வ­தில் அரசு கவ­னம் செலுத்தி வரு­கி­றது. தொழில் துறைக்­குத் தேவை­யான திறன்­மிகு பணி­யா­ளர்­களை உரு­வாக்­கு­வது மட்­டு­மின்றி, நவீன அறி­வி­யல் ஆராய்ச்­சி­களை ஊக்­கு­விப்­ப­தன் மூலம் பல்­வேறு துறை­க­ளின் முன்­னேற்­ற த்­திற்­கும் இது வழி­வ­குக்­கி­றது. தொழில்­துறை அமைப்­பு­க­ளு­டன் இணைந்த 4.0 தர­நி­லையை எய்­தி­டும் பொருட்டு 3,014 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 45 அரசு தொழில்­நுட்­பக் கல்­லூ­ரி­க­ளில் பாடத்­திட்­டங்­கள் மற்­றும் கட்­ட­மைப்­பு­களை மேம்­ப­டுத்­தும் முன்­னோ­டித் திட்­டத்­தினை அரசு செயல்­ப­டுத்தி வரு­கி­றது.

7.5 சத­வி­கித இட ஒதுக்­கீட்­டில் சேர்ந்­துள்ள மாண­வர்­க­ளுக்கு கல்­விக் கட்­ட­ணம், விடுதி கட்­ட­ணம்: 7.5 சத­வி­கித சிறப்பு உள் இட­ஒ­துக்­கீட்­டின் கீழ் கடந்த மூன்­றாண்­டு­க­ளில் 28,601 அர­சுப் பள்­ளி­யில் பயின்ற மாணாக்­கர்­கள் பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் சேர்க்கை பெற்­றுள்­ள­னர். இம்­மா­ணாக்­கர்­க­ளுக்­கான கல்­விக்­கட்­ட­ணம், விடு­திக் கட்­ட­ணம், போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­ணம் போன்­ற­வற்­றிற்­காக 213.37 கோடி ரூபாய் நிதி உதவி வழங்­கப்­பட்டு மாண­வர்­கள் கல்வி தொடர வழி­வகை செய்­துள்­ளது.

முதல் தலை­முறை பட்­ட­தாரி மாணாக்­கர்­க­ளுக்கு கல்­விக் கட்­ட­ணச் சலு­கைக்­காக ரூ.1,000 கோடி: மாநி­லத்­தி­லுள்ள அனைத்­துப் பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளி­லும் ஒற்­றைச் சாளர கலந்­தாய்வு மூலம் நேரடி சேர்க்கை பெற்­றுள்ள முதல் தலை­முறை பட்­ட­தாரி மாணாக்­கர்­கள் தொடர்ந்து உயர்­கல்­வி­யி­னைத் தொடர ஆண்­டு­தோ­றும் கல்­விக் கட்­டண சலுகை வழங்­கப்­பட்டு வரு­கி­றது. அந்த வகை­யில் கடந்த 3 ஆண்­டு­க­ளில் 4 இலட்­சத்து 13 ஆயி­ரத்து 241 மாண­வர்­க­ளுக்கு கல்­விக் கட்­டண சலு­கை­யாக ரூ.1,000 கோடி வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஆண்­டு­தோ­றும் 10,000 மாண­வர்­க­ளுக்­குத் தொழில் திறன் மேம்­பாடு: அரசு பொறி­யி­யல் கல்­லூரி மற்­றும் அரசு பல­வ­கைத் தொழில்­நுட்­பக் கல்­லூ­ரி­க­ளில் பயி­லும் மாண­வர்­க­ளின் தொழில்­நுட்­பத் திறனை மேம்­ப­டுத்­தி­டும் வகை­யில், ஒவ்­வொரு ஆண்­டும் 10.000 மாணாக்­கர்­கள் தேர்­வுச் செய்­யப்­பட்டு அவர்­க­ளின் தொழில்­நுட்ப பயிற்­சி­யினை மேம்­ப­டுத்­திட தொடர்ந்து 25 நாட்­க­ளுக்­குத் தொழி­லக உட்­ப­யிற்சி வழங்­கி­டும் பொருட்டு, தலா ஒரு மாணாக்­க­ருக்கு ரூ.16,600 வீதம் உத­வித் தொகை வழங்­கப்­ப­டு­கி­றது. தொழி­லக உட்­ப­யிற்­சி­யினை வெற்­றி­க­ர­மாக முடிக்­கும் மாண­வர்­க­ளுக்கு அந்த நிறு­வ­னத்­தி­ லேயே அவர்­கள் வேலை பெறும் வாய்ப்­பி­னை­யும் பெறு­கி­றார்­கள்.

பிற மொழி­களை கற்­ப­தில் ஆர்­வ­முள்ள மாணக்­கர்­க­ளில் வேலை­வாய்ப்பு மற்­றும் போது­மான கல்­வி­யி­ னைப் பெற்­றி­டும் வகை­யில், தமி­ழ­கத்­தி­லுள்ள 10 அரசு பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் இறு­தி­யாண்டு பயி­லும் மாணக்­கர்­க­ளுக்கு ஜெர்­மன், பிரெஞ்சு மற்­றும் ஜப்­பா­னிய மொழி­கள் கற்­றுத் தரப்­பட்டு, கடந்த இரண்டு ஆண்­டு­க­ளில் 1,200 மாணாக்­கர்­கள் பய­ன­டைந்­துள்­ள­னர்.

முத­ல­மைச்­ச­ரின் ஆராய்ச்சி மானி­யத் திட்­டம்: தமி­ழ­கத்­தில் உல­கத்­த­ரம் வாய்ந்த ஆராய்ச்­சி­களை மேற்­கொள்­ள­வும், ஆராய்ச்சி மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் மற்­றும் இள­நிலை மற்­றும் முது­நிலை பயி­லும் மாணாக்­கர்­களை ஆராய்ச்சி செய்ய ஊக்­கப்­ப­டுத்­து­கின்ற வகை­யில், முதல்­வர் ஸ்டாலி­னின் தொலை­நோக்கு பார்­வை­யில் உதித்த திட்­டமே ஆராய்ச்சி மானி­யத் திட்­ட­மா­கும்.

கடந்த 2023-_2024 கல்­வி­யாண்­டில் தொடங்­கப்­பட்ட இத்­திட்­டத்­தின் வாயி­லாக ஆண்­டு­தோ­றும் 50 கோடி ரூபாய் உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கும் மானி­ய­மாக வழங்­கப்­ப­டு­கி­றது. இதன் பய­னாக, மாண­வர்­க­ளி­டம் ஒளிந்­துள்ள புது­மை­யான தொழில்­நுட்­பங்­கள், தயா­ரிப்­பு­கள், வணிக மாதி­ரி­கள் மற்­றும் புதிய தொழில்­நுட்ப தயா­ரிப்பு முறை­களை ஊக்­கு­விக்­க­வும், தர­மான ஆராய்ச்சி கட்­டு­ ரை­களை தயா­ரித்து வழங்­கி­ட­வும் வழி­வகை செய்­யப்­பட்டு, நாளது வரை­யில் 1,960 ஆராய்ச்சி கருத்­துக்­கள் பெறப்­பட்­டுள்­ளன.

காம­ரா­ஜர் கல்­லூரி மேம்­பாட்­டுத் திட்­டம்: பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் கல்­லூரி மேம்­பாட்­டுத் திட்­ட த்­தின்­கீழ் அரசு பொறி­யி­யல் கல்­லூ­ரி­கள், அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­கள் மற்­றும் அரசு பல­வகை தொழில்­நுட்­பக் கல்­லூ­ரி­க­ளில் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை 5 ஆண்­டு­க­ளில் மேம்­ப­டுத்­திட ரூ.1000 கோடிக்கு நிர்­வாக அனு­மதி வழங்­கப்­பட்டு முதற்­கட்­ட­மாக, 2022-23ம் ஆண்­டுக்கு ரூ.250 கோடி­யும். 2023-24ம் ஆண்­டுக்கு ரூ.200 கோடி­யும் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு கல்­லூ­ரி­க­ளுக்­குத் தேவை­யான கூடு­தல் கட்­ட­டங்­கள், 

புதிய கல்­லூ­ரி­களை கட்­டு­தல், ஆய்­வ­கங்­களை ஏற்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட பல பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ ளில் டிஜிட்­டல் மாற்­றம்: உயர் கல்­வித் துறை­யில் நிறு­வன வள திட்­ட­மி­டல் மற்­றும் மென்­பொ­ரு­ளு­டன் கூடிய ஒருங்­கி­ணைந்த கற்­றல் மேலாண்மை அமைப்­பினை (LMS & ERP) ரூ.150 கோடி செல­வில் உரு­வாக்கி, 14 அர­சுப் பல்­க­லைக்­க­ழ­கங்­கள், கல்­லூ­ரிக் கல்வி இயக்­கு­ந­ர­கம் மற்­றும் தொழில்­நுட்­பக் கல்வி இயக்­கு­ந­ர­கம் ஆகி­ய­வற்­றில் டிஜிட்­டல் மாற்­றத்­தினை வழங்­கி­ட­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது.

1,750 கௌரவ விரி­வு­ரை­யா­ளர்­கள் நிய­ம­னம்: அர­சுக் கல்­லூ­ரி­க­ளில் காலி­யாக உள்ள உதவி பேரா­சி­ரி­யர் பணி­யி­டங்­களை நிரந்­த­ரப் பேரா­சி­ரி­யர்­க­ளைக் கொண்டு நிரப்­பி­டும் வரை மாண­வர்­க­ளின் கல்வி பாதிக்­கா­வண்­ணம் தொகுப்­பூ­திய அடிப்­ப­டை­யில் 1,750-க்கும் மேற்­பட்ட கௌரவ விரி­வு­ரை­ யா­ளர்­கள் நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த மூன்­றாண்­டு­ க­ளில் 27 அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­க­ளுக்கு நிரந்­த­ரக் கட்­ட­டம் கட்­டு­வ­தற்கு நிர்­வாக அனு­மதி மற்­றும் நிதி ஒப்­ப­ளிப்பு செய்து அர­சாணை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதில் 2 கல்­லூ­ரி­கள் முதல்­வர் ஸ்டாலி­னால் அண்­மை­யில் திறந்து வைக்­கப்­பட்­டன. மேலும், 2 கல்­லூ­ரி­க­ளில் கட்­ட­டப் பணி­கள் முடி­யும் தரு­வா­யி­லும், 23 கல்­லூ­ரி­க­ளில் கட்­ட­டப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டும் வரு­கின்­றன.

சென்னை மாநி­லக் கல்­லூ­ரி­யில் கலை­ஞர் அரங்­கம்: சென்னை, மாநி­லக் கல்­லூ­ரி­யில் 5,564 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் ஏறத்­தாழ 2000-க்கும் மேற்­பட்ட நபர்­கள் அம­ரக்­கூ­டிய வகை­யில் கலை­ஞர் பெய­ரில் மாபெ­ரும் நவீன அரங்­கம் (Auditorium) 63 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பொதுப்­ப­ணி த்­து­றை­யால் கட்­டப்­பட்டு வரு­கி­றது.

முத­ல­மைச்­ச­ரின் ஆராய்ச்சி ஊக்­கத் தொகை திட்­டம்: தமி­ழக மாண­வர்­க­ளின் ஆராய்ச்­சித் திறனை மேம்­ப­டுத்­த­வும், புதிய கண்­டு­பி­டிப்­பு­க­ளைத் தமி­ழ­கத்­தில் ஊக்­கப்­ப­டுத்­த­வும் “Chief Minister Research Fellowship” “முத­ல­மைச்­ச­ரின் ஆராய்ச்சி ஊக்­கத்­தொகை” திட்­டம் முதல்­வர் ஸ்டாலி­னால் 2023ம் ஆண்­டில் அறி­விக்­கப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.  

 முதல்­வர் ஸ்டாலி­னின் தொலை­நோக்­குப் பார்­வை­யில் உதித்த பல்­வேறு உன்­ன­தத் திட்­டங்­கள் உயர்­கல்­வித் துறை­யின் வாயி­லாக செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தன் பய­னாக, இன்று தமி­ழ­கம் உயர்­கல்­வி­யில் இந்­தி­யா­வி­லேயே முதன்மை மாநி­ல­மாக திகழ்­வ­தோடு மட்­டு­மின்றி; ஏனைய பிற மாநி­லங்­க­ளுக்­கும் வழி­காட்­டி­யாக திகழ்ந்து வரு­கி­றது.” என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோடு அருகே 4 வழி சாலையில் அணுகுசாலை ஆக்கிரமிப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ
கன்னியாகுமரியில் வந்தே மாதரம் பாடல் 150 ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
குளச்சல் அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
குழித்துறையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
ஊராட்சியில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தங்கம் வெல்ல பயிற்சி கொடுத்த கராத்தே மாஸ்டரை பாராட்டு

September 24, 2024
48 Views
தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழா
இடையூறு ஏற்படுத்திய வாகனங்களுக்கு அபராதம்
விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பூதப்பாண்டியில் ஆர்ப்பாட்டம்
வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account