திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சீலப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு நாட்கள் தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த துவக்க விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சீனிவாசன் வரவேற்றார். மருத்துவ அலுவலர்கள் காவியா மற்றும் சிபானா ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய தர நிர்ணய சான்றிதழ் மதிப்பீட்டாளர்கள் டாக்டர். ரஞ்சித்குமார் மற்றும் டாக்டர். அகுலா மகேஷ்வர் ராவ் ஆகியோர் மதிப்பீடு செய்து வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிப்பீட்டார்கள் இருவரும் சீலப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.



