திருப்பூரில்
மார்ச்: 26
ரம்ஜான் பண்டிகையையொட்டி
திருப்பூர் வடக்கு மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள SAP பள்ளிவாசலில் வடக்கு மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர்.முகமது ரஃபீக் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான.தினேஷ் குமார், திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர். கிருஷ்ணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர்.ஆர். நாகராஜ்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர். சையது முஸ்தபா ஆகியோர் சமூக நல்லிணக்கை இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக SAP பள்ளிவாசலின் தலைமை இமாம். அப்துல் ரஹீம் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு சிறப்பு பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து நடைபெற்ற சமூக நல்லிணக்க இஸ்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான தமிழ் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சியையும் பல வகைகளையும் உண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் ஐக்கிய ஜமாத் வடக்கு மாவட்ட செயலாளர். முகமது ஹசன், திருப்பூர் ஐக்கிய ஜமாத் வடக்கு மாவட்ட பொருளாளர். அஜ்மத்துல்லா, அனுப்பர்பாளையம் மஸ்ஜிதே சித்திக் பள்ளிவாசல் தலைவர். முபாரக், கணக்கம்பாளையம் பள்ளிவாசலின் முத்தவல்லி.முகமது ரஃபீக் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.