தென்காசி மாவட்டம் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ,வாசுதேவநல்லூர் ,சிவகிரி ,செங்கோட்டை, தென்காசி ,பாவூர்சத்திரம், ஆலங்குளம் ,கடையும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்படுள்ளன இந்த திருட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் இந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் புளியங்குடி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மீனாட்சி நாதன் மேற்பார்வையில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் இதற்கென தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரு சக்கர வாகனத்தை திருடிய திருடனை வலை வீசி தேடி வந்தனர் இந்த நிலையில் நேற்று மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கடையநல்லூர் மங்களாபுரம் சோதனை சாவடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர் அப்பொழுது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே அவரின் வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த பதிவு எண்ணை போலீசார் பரிசோதித்து பார்த்த பொழுது அது போலியான பதிவு எண் என தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்த பொழுது அவர் புளியங்குடி சிந்தாமணி பகுதி மடத்து தெருவை சேர்ந்த அட்சய லிங்கம் மகன் மனோகரன் 45 என்பவர் என தெரிய வந்தது இவர் கடையநல்லூர் தென்காசி பகுதிகளில் முகத்தை மூடியவாறு தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது அந்த வாகனங்களை குறைந்த விலைக்கு பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது பின் இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை திருடிய மனோரனை கைது செய்து மேலும் அவர் திருடி விற்பனை செய்த மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்



