தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதியுடையவர்கள் 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு, இளநிலை பட்டப்படிப்புகள், நர்சிங் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்கலுடன் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங். தெரிவித்துள்ளார்
தேனி மாவட்டம், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics