திருவாரூர்
மார்ச் 18
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆகிய துறைகள் இணைத்து ஏற்பாடு செய்துள்ள கல்வி சுற்றுலா சென்று வருவதற்கான பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் செவித்திறன் குறையுடைய மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிலும் 40 குழந்தைகள் மற்றும் சிறப்பாசிரியர்கள் தரங்கம்பாடி மற்றும் பூம்புகார் ஆகிய சுற்றுலா தளங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆகிய துறைகள் இணைத்து ஏற்பாடு செய்துள்ள கல்வி சுற்றுலாசென்று வருவதற்கான பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ப.புவனா மற்றும் திருவாரூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.