அரியலூர், மே:23
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிலப்பனூர் அருகில் ஆனை வாரி ஓடையும் வெள்ளாறூம் சந்திக்கின்ற இடத்தில் நேற்று இரவிலிருந்து மணல் மாபியாக்கள் மண் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் திருடப்படும்
மண்ணை ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான இடத்தில் கொட்டி சேமித்து வைத்து வருகிறார்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் மணல் மாபியாக்கள் மீது மாவட்ட நிர்வாகம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அதற்கு துணை போகின்ற சிமெண்ட்ஆலை நிர்வாகத்தின் மீதும் வருவாய்த் துறையினர், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் பேரரசு கட்சி கேட்டுக் கொள்கிறது தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி தளவாய் காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடக்கும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.



