மதுரை மே 22,
மதுரையில் கனமழையால் மீனாட்சியம்மன் வீதி உலா ரத்து மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வைகாசி உற்சவ திருவிழா விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மதுரையில் தொடர் கனமழை பெய்து வருவதால் எட்டாம் நாளன்று கனமழை பெய்து வந்ததால் வழக்கமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் புது மண்டலத்தில் எழுந்தருளும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு கோவில் வளாகத்திற்குள் வசந்த உற்சவம் நடைபெற்றதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சித்திரை வீதி உலாவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழிபட வந்த பக்தர்கள் மீனாட்சி சுந்தரேசுவரை வழிபட கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து வழிபட்டனர்.



