நாகர்கோவில் – மார்ச் – 04,
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்றோர் காவல் துறை பணியாளர்கள் நலன் சங்கம் மாவட்ட தலைவர் பென்சிகர் தலைமையில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை கடந்த 2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுளாக செயல்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மருத்துவகல்லூரிகளில் கைதிகள் பாதுகாப்பு அறைகள் உள்ளன. நமது அண்டை மாவட்டமான திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையிலும் கைதிகள் பாதுகாப்பு அறை உள்ளது. காவலில் உள்ள கைதிகள் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது காவல் துறையினர் பாதுகாப்பு செய்து வருகிறார்கள். ஆனால் கைதிகள் பாதுசாப்பின் போது கைதிகளை இயற்க்கை உபாதைகளுக்கு அழைத்து செல்லும் போது காவலர்களின் கண்காணிப்பில் இருந்து நழுவி தப்பி ஓடி தலைமறைவாகி விடுகின்றனர். இது அவ்வப்போது நடந்து வருவதால் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் தண்டனை பெறுவதோடு, காவல் துறை மீது பொதுமக்கள் மத்தியில் அவ மரியாதையும் ஏற்ப்படுகிறது. எனவே சிகிச்சையில் உள்ள கைதிகளை பாதுகாக்கும் பொருட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கைதிகள் பாதுகாப்பு அறை அமைத்து காவலர்களின் மனகுமுறலுக்கு நிரந்தர தீர்வு காணவும், மேலும் இது சம்பந்தமாக ஏற்கனவே 04.11. 2024 -ல் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து மனு கொடுத்து உள்ளோம். இது நாள் வரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை . மேலும் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புறக்காவலர் நிலையத்தில் அரசு நிர்ணயித்துள்ள அனுமதி வலிமை பாதுகாப்பு பணியில் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே அரசால் ஒதுக்கப்பட்ட புறக்காவல் நிலைய வலிமைமிக்க ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு இதர பதவிகளில் உள்ளவர்களை பணியில் அமர்த்தி நடைமுறை படுத்த வேண்டும் என்று அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறை பணியாளர் நலன் சங்க துணை தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் சதீஷ்குமார், துணை செயலாளர் சரத் சந்திரன், பொருளாளர் முருகேஷன், சட்ட ஆலோசகர் மரியஸ்டீபன் , மற்றும் உறுப்பினர்கள் ராஜ்குமார், லாசர், முகுந்தன், பிரேம்குமார், அசோக்குமார், முருகன் , விஸ்வக்ஷேனா உட்பட உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.