குளச்சல், மார்-4
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்புக்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலிருந்து போலீசார் வந்துள்ளனர் . சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள். கோயில் வளாகத்தில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதி மற்றும் கோவிலை சுற்றியும் கண்காணிப்பு டவர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. போலீசார் பைனாக்குலர் மூலம் கண்காணித்து வருகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி ஸ்டாலின் நேற்று முதல் பார்வையிட்டு வருகிறார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், –
மண்டைக்காடு கோவில் பாதுகாப்பு பணியில் அரண் 650 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசர்கள் கண்காணிக்கிறார்கள். குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கோயிலுக்கு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் வழி தவறிவிட்டால் அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த முறை குழந்தைகளின் கையில் புதிதாக ஸ்டிக்கர் அடையாளம் பொருத்தப்படும். பெண்களுக்கு நகைகளை பாதுகாக்கும் வகையில் சேஃப்டி பின் வழங்கப்படுகிறது. கடலில் குளிக்கும் பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்புத்துறை, காவல்துறை சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறினார். மொத்தத்தில் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் மதியழகன், ரவிசங்கர், ஏஎஸ்பி பிரவீன் கெளதம் சாமுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்