மதுரை மே 22,
மதுரையில் வெற்றி வேர் மாலை அணிந்த முருகப்பெருமான். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக உற்சவ திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவின் 7ம் நாளன்று இரவு திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெற்றிவேர் மாலை அணிந்து வசந்த மண்டபம் எழுந்தருளி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்



