நீலகிரி.மார்.04.
நீலகிரி மாவட்டத்தில் ரேசங்கடைக்கள் மூலம் குறைந்த விலையில் துணிபைகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டமாக கடைபிடிக்கப்பட்டு 50 மைகரான் கீழுள்ள பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் 17 வகையான பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்கள் பரிந்துரைக்கப்பட்ட பொருட்கள் பயன்பாடு என்பது சரியாக இல்லாததாலும் அதன் விலை அதிகரித்து விறப்னை செய்யபடுவதாலும் பொதுமக்கள் மீண்டும் பிளாஸ்டிக் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களை அதிகம் பயன்படுத்தும் சூழல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிக்பைகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் துணி பைகளை கடைகளில் தற்போது விலை அதிகரிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்துவது மிகவும் குறைந்து வருகிறது என்பது வேதனையான ஒரு விஷயமாக உள்ளது.
மேலும் துணிப்பைகள் என்கிற அடிப்படையில் தெர்மாகோல் வகையிலான கடல் நுரைகள் மூலம் தயாரிக்கப்படும் பைகளை அதிகமாக உள்ளது. இந்த பைகள் அதிக எடையையும் தாங்கக்கூடிய தன்மை இல்லாததால் பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தினாலும் பிளாஸ்டிக் பொருட்களை போல அடிக்கடி பைகள் வாங்கும் நிலையே உள்ளது.
இவையும் எளிதில் மக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பேப்பர் பைகள் குளிர் மற்றும் மழை காலங்களில் விரைவில் கிழிந்துவிடும் என்பதும் குறிப்பிடதக்கது
இவற்றைத் தவிர்க்க பெருமக்களிடையே குறைந்த விலையில் துணிப்பைகள் கிடைக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
தற்போது உதகை நகரில் மட்டும் தானியங்கி மஞ்சள் பை இயந்திரம் பொருத்தப்பட்டது. ஆனால் அதுவும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு சார்பில் துணிப்பைகள் தயாரித்து அவற்றை நியாய விலை கடை குறைந்த விலையில் விற்பனை செய்வது மூலம் பொது மக்களிடையே அதிக துணி பைகள் பயன்பாட்டை உருவாக்க முடியும்
நீலகிரி மாவட்டத்தில் மகளிர் தையல் கூட்டுறவு சங்கம் மூலம் தற்போது பள்ளி சீருடைகள் தைத்து பெறப்படுகிறது. அதுபோல மகளிர் தையல் கூட்டுறவு சங்கம் மூலம் துணி பைகள் தைத்து பெறமுடியும். சீருடை தைக்க வழங்குவது போல பைக்கு உள்ள தையல் கூலி வழங்கலாம். இதன் மூலம் தையல் படித்த மகளிர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். காடா துணிகள் மொத்தமாக கொள்முதல் செய்யும் போது அதன் விலையும் குறைவாக கிடைக்கும். அதில் துணி பைகள் தைத்து விற்பனை செய்யும் போது குறைந்த விலையில் பைகள் விற்பனை செய்யமுடியும்.
தைத்து பெறப்பட்ட துணி பைகளை நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் நியாய விலை கடைகள், கூட்டுறவு சிறப்பங்காடி, கூட்டுறவு – முதல்வர் மருந்தகங்கள் அமுதம் அங்காடி என சுமார் 500 மேற்பட்ட இடங்களில் விற்பனை செய்ய முடியும். இவற்றில் ரூபாய் 10 வீதம் குறைந்த விலையில் விற்பனை செய்யலாம்.
அனைத்து பகுதிகளிலும் நியாய விலை கடைகளில் துணி பை விற்பனை செய்வதால் அனைத்து பகுதிகளிலும் பரவலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் துணி பைகள் வாங்க முடியும். மேலும் வெவ்வேறு அளவுகளில் துணி பைகள் தைத்து அளவுகேற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யமுடியும். இதனால் மக்களிடையே எளிதில் துணி பை பயன்பாட்டினை அதிகரிக்க முடியும். கடைகளில் கடல்நுறை தெர்மகோல் வகையிலான பைகள் பயன்பாடு குறையும்.
இதன் மூலம் பிளாஸ்டிக் பைகள் தவிர்க்க வாய்ப்பு கிடைக்கும். எனவே இதற்கு
நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை, மகளிர் திட்டம், கூட்டுறவு துறை ஆகியன இணைந்து துணி பை தைத்து விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.



