ராமநாதபுரம், மார்ச் 2-
மத்திய மாநில எஸ்சி எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில்
கூட்டுறவு ஊழியர் சங்க நிர்வாகிகள் போர்வையில் நேர்மையாக பணியாற்றும் மாவட்ட அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் அவல நிலையை கண்டித்தும்
பட்டியலின ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும்
பதவி உயர்வு இட ஒதுக்கீடு 16 (4A) சட்டத்தை உடனடியாக நிறைவேற்றவும்
கூட்டுறவு சங்கங்களில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீட்டு முறையை நிறைவேற்றவும்
27614 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்
சேக்கிழார் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் தங்கவேலு வரவேற்றார்,
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிறுவனர் மாநில தலைவர் கருப்பையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
மாவட்ட அமைப்பாளர் சோமசுந்தரம் மற்றும் கூட்டுறவுத்துறை பொறுப்பாளர் சதீஷ்குமார் கோவிந்தராஜ் கீதா ,மாவட்டத் துணைப் பொறுப்பாளர்கள் பாண்டியராஜன் சுரேஷ், ஜீவானந்தம், TWAD மாதவன், மாவட்ட நிதி செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் பாலச்சந்திரன் மரியம் ஜேம்ஸ், ஸ்ரீராமர், டாஸ்மாக் மாநில ஒருங்கிணைப்பாளர் வேலு செல்வகுமார். மண்டல நிர்வாகிகள் முருகன், மருத்துவர் பிரசாத், மற்றும் பரமக்குடி சக்திவேல் ,வங்கி ஊழியர் சார்பில் செந்தில் வேல்,, திருமுருகன், விருதுநகர் மாவட்ட தலைவர் வேலாண்டி ஆகியோர்கள் பேசினர் . வருவாய்த் துறையின் சார்பில் வட்டாட்சியர் வரதராஜன், சம்பத் குமார், சத்தியேந்திரன் தமிழரசு, கணபதி பொதுப்பணித்துறை நிர்வாகிகள் பொறியாளர் ராஜேந்திரன், ஜெயதுரை, கால்நடைத்துறை தேவேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை சிவசாமி, கிருஷ்ணன். ஆதிராவிட நலத்துறை குருநாதன், முத்துக்குமார் ரங்கநாதன், , ஆசிரிய பயிற்றுநர்கள் சுரேந்திரன் உலகநாதன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், வட்டாரப் பொறுப்பாளர்கள் ஆர்எஸ் மங்கலம் சத்யராஜ், திருப்புல்லாணி கணேசன், மண்டபம் மாரிமுத்து, கடலாடி ராமர் வேல், நயினார்கோவில் சாத்தையா, திருவாடானை போதுராஜா, பரமக்குடி கனகசபேஷ், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார நிர்வாகிகள் ராமர் வேலு கணேசன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் மோகன் குமார் நன்றி உரை ஆற்றினர்.