ஆம்பைர்:பிப்:22, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ காலபைரவர்
ஆலயம் பொற்காலத்தில் முவ்வேந்தர்கள் காலத்தில் எழுப்பட்ட (அ) கட்டப்பட்ட பழைமை வாய்ந்தது பைரவர் திருக்கோவிலில் ஸ்ரீ குரோதி வருடம் மாசி மாதம் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ காலபைரவர்க்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் சிறுவர்கள் என ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டு காலபைரவர் அருள் பெற்றனர் .



