ராமநாதபுரம், பிப்.21-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தேவிபட்டினம் கிளை சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் தேவிபட்டினம் ராவுத்தர் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் பனைக்குளம் அசன் கிராத் ஓதினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஊடக அணியின் மாவட்ட செயலாளர் பகுருல்லா விவசாய அணியின் மாவட்ட செயலாளர் உபைதுல்லா மீனவர் அணி மாவட்ட செயலாளர் புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த உறுப்பினர் தேவிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் கடந்த கால நிகழ்வுகள் பற்றியும் எதிர்கால செயல் திட்டங்கள் பற்றியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சிறப்புரை நிகழ்த்தினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி தலைவராக உமர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயலாளராக முகமது மசூத் மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளராக ஜமீர் பொருளாளராக ஜம்ஜத் அலி துணைத் தலைவராக நசீர் தமுமுக துணை செயலாளர்கள் அப்துல் ரஹ்மான் சாகுல் பகுருதீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் துணை செயலாளர்களாக சார்தின் அசாருதீன் நிசார் ஆகிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியில் அதிகமான உறுப்பினர்கள் சேர்ப்பது எனவும் வருகின்ற 26 ஆம் தேதி பனைக்குளத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமூக நல்லிணக்க விழாவில் அதிகமான மக்கள் கலந்து கொள்ள செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர் நசீர் நன்றி கூறினார்.