By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் சந்தித்து ஆறுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட ஆட்சியர் சந்தித்து ஆறுதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் சந்தித்து ஆறுதல்

Last updated: February 21, 2025 12:44 pm
February 21, 2025
90 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 21 

 

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தோட்டமலை பகுதியில் கரடி தாக்கி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சந்தித்து ஆறுதல் கூறி தெரிவிக்கையில்-

 

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தோட்டமலை மலைவாழ் பழங்குடி கிராமத்தை சார்ந்த ராமையன் காணி (வயது 70), அவரது மகன் விஜய குமார் (வயது 40) ஆகிய இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள். 19-ம் தேதி மதியம் தோட்டத்தில் நல்ல மிளகு பறிக்க சென்றனர். நல்ல மிளகு பறித்து விட்டு திரும்பி வரும் போது, தண்ணீர் ஓடையின் அருகில் கரடி தன் குட்டியுடன் நின்றதை இருவரும் பார்த்துள்ளனர். இருவரும் சுதாகரிப்பதற்குள் தாய் கரடி திடீரென ராமையன் மீது பாய்ந்து அவரை கீழே தள்ளி அவரது முகத்தை தாக்கியது. தன் தந்தையை கடித்ததை பார்த்து கரடியை துரத்த முயன்ற விஜயகுமாரையும்  கரடி தாக்கியது. அவருடைய வளர்ப்பு நாயால் இருவரும் உயிர் தப்பினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து மேல்சிக்கிச்சையாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

காயமடைந்த இருவரின் தீவிர காயத்தினை கண்டறிந்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை நிபுணர்கள் தர்சினி, கௌதின், மயக்க மருந்து சிகிச்சை நிபுணர் மரு.விஜய் ஆனந்த் ஆகியோர் அடங்கிய குழு நேற்று இரவே இவர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்கள். தற்போது இருவரும் அறுவை சிகிச்சை பிரிவில் கவனிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் மேற்கொள்ள மருத்துவமனை முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டது. என அவர் தெரிவித்தார்.

 

ஆய்வில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.இராமலெட்சுமி. உண்டு உறைவிட மருத்துவர் மரு.ஜோசப்சென். உதவி உறைவிட மருத்துவர் மரு.ரெனிமோள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜீவானாம்சம் கேட்ட மூதாட்டியை வெட்டி கொலை
ஆமணக்கன்விளையில் ரூ.35 லட்டத்தில் கலையரங்கம்
சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் இதய செயலிழப்பு மீது 4-வது வருடாந்திர மாநாட்டை நடத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
ஊர் காவல் படை ஆள் சேர்ப்பு முகாம்
பூம்புகார் படகு போக்குவரத்து கழக வளாகத்தில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய எம் பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தென்தாமரைகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

March 2, 2026
48 Views
நாகர்கோவிலில் முதுகு தண்டுவடம் பாதித்தோர் பிரசாரம்
அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் அடிக்கல் நாட்டு விழா
பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account