கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், சாமல்பட்டி ஊராட்சியின் சுப்பிரமணியம் நகர் கிராம மக்கள், கடந்த 58 ஆண்டுகளாக அரசு கணக்கில் இல்லாத வீட்டுமனை பட்டாக்களைப் பெற்றுள்ளனர்.
முன்னாள் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லக்குமார் முயற்சியின் அடிப்படையில்
கிடைக்கப் பெற்றதாக இந்த கிராம மக்கள் டாக்டர் ஏ. செல்லக்குமாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தார் தலைமையில், குமரவேல் மாநிலச் செயலாளர் ஜே. எஸ். ஆறுமுகம், தொகுதி பொறுப்பாளர் சசிகுமார், வட்டாரத் தலைவர் தனஞ்செயன், மாவட்டச் செயலாளர் கஞ்சனூர் கேசவன், மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்தூர் ராமன் போன்றோர் கலந்து கொண்டனர்.