சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தமிழ் வளர்ச்சிதுறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களிடையே மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில், வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி , உதவி இயக்குநர் சீதாலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



