தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி 6 மற்றும் 7-ஆம் தேதி சுமார் ரூ.9369 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், 45,485 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.என். நேரு, கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் M.Cசண்முகையா,G.V மார்க்கண்டேயன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கட்சி முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர்.