சென்னை, பிப்-06,
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை நடத்திய விழிப்புணர்
ஓட்டம் சென்னை பெசன்ட்நகர் ஆல்காட் மொமேரியல் பள்ளியிலிருந்து நடை பெற்றது. இதில் 6,500 பேர் பங்கேற்றனர்.
இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த ஓட்டம் 10 கி.மீ மற்றும் 5 கிமீ என வகைபடுத்தப்பட்டு நடத்தப்பட்டது.
இதில் பிட்னஸ் ஆர்வலர்கள், தொழில்முறை விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் கார்ப்பரேட் தொழில் வல்லுநர்கள் உட்பட பலதரப்பட்ட நபர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் கதிரியக்க புற்றுநோயியல் இயக்குநர் டாக்டர் ஏ .என் . வைத்தீஸ்வரன் கூறுகையில், ” உலகளவில் அதிக இறப்புக்கு புற்றுநோயே முக்கிய காரணம் என்பதால் அந்நோயை முன்கூட்டியே கண்டறிவது அவசியம் . காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை வசதிகள் உள்ளது . மேலும் ஆரம்பத்திலேயே அந் நோயை கண்டறிந்தால் விரைவாக குணப்படுத்த முடியும். பொது மக்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கல்வியை கற்பிப்பதும், வழக்கமான சோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்க அவர்களை ஊக்குவிப்பதும் இந்த ஓட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த ஓட்டத்தின் 3ஆம் ஆண்டு நிகழ்வுக்கு சென்னை மக்களிடமிருந்து நேர்மறையான செயல்பாடுகளை கண்டு மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆதரவு தொடரும் என நம்புகிறோம், மேலும் இந்த நிகழ்வு அதிகமானோரை அவர்களின் அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியை ஒருங்கிணைக்க தூண்டுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. என்றார்