தாம்பரம்
தற்காப்பு கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா மற்றும் கராத்தே செய்து உலகசாதனை படைத்தனர்.
மேடவாக்கத்தில் உள்ள வேல்ஸ் குளோபல் பள்ளியில் தற்காற்பு கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோவா உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. அதன்படி 65 மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து 4 நிமிடத்தில் 100 விதமான யோகாசனங்களை செய்து அசத்தினர்.
அதபோல் 42 மாணவர்கள் கண்களை கட்டிகொண்டு தொட்15 நிமிடங்கள் கராத்தே கட்டா செய்து உலக சாதனை படைத்தனர்.
இதனை நோவா உலகசாதனையை புத்தக தலைமை எடிட்டர் ராஜ்குமார், இந்திய இயக்குனர் தீலிபன், மாநில நடுவர் இசக்கி ராஜ் ஆகியோர் பார்வையிட்டு உலகசாதனை அங்கீகரித்தனர். இதனையடுத்து உலகசாதனை படைத்த பள்ளி முதல்வர் கிறிஸ்டினா ஜூலிட் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு உலகசாதனைகான சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை
யோகா மாஸ்டர் நவீன் குமார்,
காரத்தே மாஸ்டர் ஐயப்பன் மற்றும் வேல்ஸ் குளோபல் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியர் பாராட்டுகளை தெரிவித்தனர்.