மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
சங்கரன் கோவிலில் தென்காசி வடக்கு திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு பரம பால்பாண்டியன் அரங்கில் நடைபெற்றது கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ பேசுகையில் இந்தி திணிப்பை எதிர்த்து 12 தியாகிகள் மொழிப்போர் போராட்டத்தில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டனர் அவ்வகையில் தாளமுத்து நடராஜன் என்பவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து சிறை சென்று சிறையிலேயே உயிரிழந்தவர்கள் இப்படிப்பட்ட மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை அனைவரும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது திமுக அரசு அமைந்த பின் 5500 கோடி மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 200 கோடி மதிப்பிலான நிலங்கள் சொத்துக்கள் திமுக அரசால் மீட்கப்பட்டுள்ளது சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் யூனியன் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் குருவிகுளம் யூனியன் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளதூதமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தது போல் 2026 சட்டமன்றத் தேர்தலில் இருநூறு தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் விரிவாக பேசினார் மொழிப்போர் தியாகிகளுக்கு கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தலைமைக் கழகப் பேச்சாளர் கவிஞர் தமிழ் தாசன் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் கலை கதிரவன் கலந்து கொண்டனர் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கிளை பொறுப்பாளர்கள் வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.