திருப்பத்தூர்:ஜன:29,
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலராக புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற நிலையில் வாகன ஓட்டுனர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அலுவலகத்திற்கு வந்த ஓட்டுநர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் உரிமையாளர்கள், வாகன டீலர்கள், கன்சல்டன்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என பலரும் அலுவலகத்திற்கு வந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் அனைவருக்கும் சாலை பாதுகாப்பு குறித்த தகவல்களை கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
மேலும் பொதுமக்கள் சார்பில் கேட்கப்பட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு வழிமுறைகளை கூறினார்.
ஒவ்வொரு வாகன ஓட்டுனர்களும் தங்களின் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் அனைத்து வாகன ஓட்டுனர்களும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி சரியான முறையில் பயணிக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி இடது வலது மற்றும் சிக்னல் இடங்களில் முறையான வழிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து துறை அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



