திங்கள் சந்தை, ஜன- 28
திங்கள் நகர் அருகே காரங்காடு பகுதியை சேர்ந்தவர் வினு (26). வெல்டிங் பட்டறை தொழிலாளி. சம்பவத்தன்று வினோ தனது நண்பர் ஸ்ரீதர் உடன் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொங்கல் பரிசு வாங்க சென்றார். அப்போது அங்கு நின்ற பொன் ஒருவர் ரேஷன் கடையில் வாங்கிய கரும்பை தனது வீட்டில் கொடுக்குமாறு ஸ்ரீதரிடம் கொடுத்தார்.
ஸ்ரீதர் கரும்பை கொடுப்பதற்காக வினுவுடன் அந்த பெண் வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டில் பிளஸ் – 1 படிக்கும் 16 வயது சிறுமி இருந்தார். இந்த நிலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீதர் கத்தியால் கரும்பை வெட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரம் வினு சிறுமியை பார்த்து தனது ஆடைகளைந்து, ஆபாச சைகை செய்தாராம்.
இதை சிறுமி உறவினர்களிடம் கூறி உள்ளார். இதையடுத்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வினு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.