சூரம்பட்டி ஜன 23
டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டே ராகுல் காந்தி பேசினார் இதையொட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு சூரம்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வ பெருந்தகை தொடங்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது
ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது ஜனநாயகத்தை மலரச் செய்த செய்த இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் மீது பொய் வழக்கு பொய் வழக்கை பாரதீய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ் சும் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது அதை அனுமதிக்க மாட்டோம் .
இந்தியா மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ராகுல் காந்தி திகழ்கிறார். நாட்டில் நடக்கும் அநீதியை அவர் தட்டிகேட்கிறார்.
இதனால் அவர் மீது பொய் வழக்கு போடுவதின் மூலம் அவரை யாரும் மிரட்ட முடியாது . இந்த மிரட்டலுக்கெல்லாம் அவர் பயப்படாமல் நாட்டு மக்களுக்காக இன்னும் வலிமையாக பேசுவார் எனவே உங்களது மிரட்டல் எடுபடாது கோமியம் குடிப்பவர்களுக்கே இவ்வளவு தைரியம் இருந்தால் தேசத்தை காப்பாற்றி நாட்டு விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் எனவே ராகுல் காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன .
ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்க பாலு மற்றும் எம் எல் ஏ க்கள் மாநில நிர்வாகிகள் ஈரோடு மாநகர மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.