இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 31-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் தலைவருமான சையத் மூசா தலைமையில் கோட்டை பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் அமான் என்கிற நாஸர்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் அலாவுதீன், பொருளாளர் அண்ணு, மாவட்டத் துணைச் செயலாளர்கள் அஸ்லாம்,முஸ்தபா,அம்ஜத்,இப்ராஹிம்,ஷாஜகான், நசீர் ,ரஃபி, வழக்கறிஞர் அணி மாநில பொதுச் செயலாளர் இம்தியாஸ், மற்றும் அரசு அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.



