மதுரை ஜனவரி 13,
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மதுரையில் களப்பணி
மதுரை மாவட்டம் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக_197_ ஆவது வார மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுதல் மற்றும் கவாத்து பணி ஆகியன தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் சிலம்பம் மாஸ்டர் பாண்டி முன்னிலை வகித்தார். ஆலோசகர்
பிரபு வரவேற்றார். உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நீலமேக நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் பாஸ்கரன், பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களின் பயன்கள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினர்.தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு, பொன்மொழிகள் ஆகியவை குறித்து தலைமை ஆசிரியர் தென்னவன் பேசினார். மாணவன் யுவஜித் ரவீந்திரநாத் தாகூர் வேடம் அணிந்து விடுதலை போராட்டத்தை பற்றி பேசினார். 30 க்கும் மேற்பட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டும் கவாத்து பணியும் நடைபெற்றது. விழாவில் யானை மலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள் ராகேஷ் உறுப்பினர்கள் செல்வி, பரமேஸ்வரன், அசோக்குமார் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் நீரூற்றும் பணி நடைப்பெற்றது. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு களப்பணி செய்தனர். மாணவி சத்யா நன்றி கூறினார்.