திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான மாபெரும் கலாச்சாரச் சங்கம நிகழ்ச்சி திறன் வெளியீடு 2கே25 (Talentia 2K25) என்கிற தலைப்பில் கல்லூரியில் உள்ள Dr. A.P.J. அப்துல்கலாம் அரங்கில் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் ஜி.டி.என். கல்விக் குழுமத்தின் செயலர் மற்றும் தாளாளர் அரிமா டாக்டர் க.ரெத்தினம் ஆணைக்கிணங்கப் பள்ளி ஆசிரியர்கள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் சு. சரவணன் என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்பது போல் அனைத்து வகையான பட்டப் படிப்புகளையும் ஆராய்ச்சிப் படிப்பு முடிய வழங்கக்கூடிய கல்லூரி ஜி.டி.என்.கல்லூரி என்று கூறி வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் அரிமா டாக்டர் க.ரெத்தினம் கலந்து கொண்டு மாணவர்களின் ஆர்வத்தையும், அமைதி காத்த தன்மையினையும் பாராட்டி வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் கலந்து கொண்ட பள்ளிகளுக்கும் ரொக்கப் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துத் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் இயக்குநர் முனைவர் துரை, கல்வி இயக்குநர் முனைவர் நா. மார்க்காண்டேயன், ஆலோசகர் முனைவர் இராமசாமி முதன்மைக் கல்வி அதிகாரியின் தனிஉதவியாளர் வி.கதிரேசன் ஆகியோர் போட்டியில் பங்கேற்பதே வெற்றியாகும் என்றுரைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உஷா, திண்டுக்கல் மாவட்டக் கல்வி அதிகாரி நாகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சவால்களை எதிர் கொண்டவர்களே சாதனையாளர்களாக உருவாகிறார்கள் என்று கூறிச் சிறப்புரையாற்றினர்.சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பதற்கேற்பப் பல்கலை வித்தகர்களான கலைத் திறனாளர்கள் சங்கமிக்கும் இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்டனர் .7 அரசுப் பள்ளிகளிலிருந்து 160 மாணவர்களும் , 6 அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 153 மாணவர்களும் , சி.பி.எஸ்.சி பள்ளியிலிருந்து 33 மாணவர்களும், 6 மெட்ரிக் பள்ளிகளிலிருந்து 187 மாணவர்களும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். முடிவில் சுய உதவி பிரிவில் துணைமுதல்வர் முனைவர். உ. நடராஜன் நன்றி கூறினார்.இதில் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் வெளிப்படுத்திய திறமைகளை நீதி பிறழா நடுவர்கள் குழு மதிப்பீடு செய்து பரிசுக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுத்தனர். நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.சி பள்ளி ஆகிய நான்கு பிரிவுகளிலும் சுமார் 600 மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து பரிசுகளுக்கு உரிய மாணவர்கள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ரூபாய் 2000. இரண்டாம் பரிசாக ரூபாய் 1500- மூன்றாம் பரிசாக ரூபாய் 1000- நான்காம் பரிசாக ரூபாய் 750- ஐந்தாம் பரிசாக ரூபாய் 500- என ரொக்கத் தொகை பிரித்துப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன்மைக் கல்வி அதிகாரி உஷா பரிசு வழங்கி வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டினார். கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் LD. பொன்னையா நன்றியுரை நவில நாட்டுப்பண்ணுடன் கலைத்திறன் சங்கம நிகழ்ச்சி மதியம் இனிதே முடிவடைந்தது. அதனை தொடர்ந்து கிரிக்கெட் 11 பேர்களின் முயற்சி, திரைப்படம் பல நூறு பேர்களின் உழைப்பு ஒரு நிகழ்வின் வெற்றி பலரின் ஒத்துழைப்பில் அடங்கியுள்ளது. கல்லூரியின் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளைச் சார்ந்த பேராசிரியர்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்போடு விலங்கியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் ஜீவலதா, தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் ச.மாசிலாதேவி வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியர் கேப்டன் முனைவர் எம்.பாண்டீஸ்வரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
கலாச்சாரச் சங்கம நிகழ்ச்சி திறன்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics