சென்னை , ஜன- 10, ஜெய் பீம் உழைப்பாளர் மற்றும் சிறு வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் என். எஸ் .எஃப்.டி .சி மற்றும் தாட்கோ மூலமாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகத்தில் நடைபெற்றது.
ரூ 50,000 மானியத்துடன் ரூ. 5 லட்சம் கடன் 69 நபர்க்கும், ரூ 1லட்சத்து 25 ஆயிரம் கடன் 73 நபர்கள் என மொத்தம் 142 வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
தாட்கோ மாநில திட்ட அதிகாரி வசந்தி , தாட்கோ மேலாண்மை துணை மேலாளர் சீனிவாசன், சென்னை மாவட்டத் துணை ஆட்சியரும் தாட்கோ மாவட்ட மேலாளருமான இரா. சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கினர் .
மேலும் ஜெய்பீம் உழைப்பாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் சங்கம் தலைவர் வா . செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொருளாளர் எழிலரசன், வரவேற்புரையாற்றினார் .பொதுச் செயலாளர் தே . துரைராஜ், செயலாளர் இரா.ஸ்ரீதர், துணைப் பொதுச் செயலாளர் இரா. கணேசன் கௌரவ தலைவர் ஜி . துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடை பெற்றது. மேலும் இதில் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தாட்கோ திட்ட அதிகாரி வசந்தி, துணை ஆட்சியர் மற்றும் தாட்கே சென்னை மண்டல மேலாளர் இரா.சுந்தர் ஆகியோர் பேசியதாவது:-
தாட்கோ நிறுவனம் நலிந்த சிறு வியாபாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு எப்போது உறுதுணையாக நிற்கும் அரசு நிறுவனமாகும்.
வியாபாரம் செய்ய அதிக கடன், அதிக வட்டி விகதம் செலுத்தி நஷ்டத்திலிருது மீள முடியாமலும், தொழிலை செய்ய முடியாமல் போவதை தவிர்பதற்காக தாட்கோ நிறுவனம் சிறு வியாபாரிகளுக்கு இன்னலை போக்கவே கடனுடன் கூடிய மானியத்தை வழங்குகிறது. இதை சரியான முறையில் பயன்படுத்தி சமூக முன்னேற்றம் காண வேண்டும் என்பதே தாட்கோவின் குறிக்கோள் என்று இருவரும் தெரிவித்தனர்.