தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் சட்ட மேதை அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பழனி நாடார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டனர் பின்னர் தென்காசியில் இருந்து மேலகரம் நோக்கி நடைபயணமாக பேரணி நடத்த முயற்சி செய்த காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் பின்பு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரை சந்தித்து அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவருக்கு எழுதிய கோரிக்கை மனுவை அளித்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், துணைத் தலைவர் சித்திக் ,ஜெய் பாக்யா சட்டநாதன், வட்டாரத் தலைவர்கள் பெருமாள், கதிரவன் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியை சார்ந்த நகரத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்



