வேலூர்_23
தமிழக ஆளுநர் ஆர்.என்.இரவி பங்கேற்பு!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி, தனியார் கல்லூரியில் (ஸ்பரஸ்) இந்தியாவின் முப்படையை சார்ந்த வீரர்களுக்கு குறைதீர்க்கும், ப்படா ஸாப்லோங்கா தர்பார் கூட்டம், ஸ்பரஸ் திட்டத்தின் கீழ் முப்படை இராணுவம், கடற்படை, விமானப்படை ஓய்வூதியதாரர்களுக்கு வருடாந்திர உயிர் சான்று அடையாளம் காணவும் அவர்களின் பல்வேறு ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்கவும் ஒரு மாபெரும் ஸ்பரஸ் விளக்க மற்றும் குறைதீர்க்கும் முகாம் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தஷின் பாரத் இராணுவ தலைமை அலுவலகம் மற்றும் வேலூர் மாவட்டம் முன்னாள் படை வீரர்கள் நலச் சங்கம் இணைந்து வேலூர் (தனியார்) தொழில்நுட்ப பல்கலைக்கழக அண்ணா கலை அரங்கத்தில் (21-12-2024) நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, சிறப்பு பாதுகாப்பு கணக்குகள் துறைத் தலைவர் மயாங்ஷர்மா, ஐ.டி.ஏ.எஸ். தஷின் பாரத் இராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார், இந்திய கடலோர காவல் படை டி.ஐ.ஜி.டி தினகரன் ஆகியோரை சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜி.ஜெயசீலன் ஐ.டி.ஏ.எஸ் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். ஸ்பரஸ் திட்டத்திலுள்ள பல்வேறு சேவைகள் பற்றியும் அவற்றினால் பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் விரிவாக சிறப்பு பாதுகாப்பு கணக்குகள் துறை தலைவர் மயாங்க் ஷர்மா ஐ.டி.ஏ.எஸ் விளக்கமாக எடுத்துறைத்தனர். முன்னாள் படை வீரர்களுக்கு அரசின் பல்வேறு உதவி திட்டங்களை பற்றியும் வேலை வாய்ப்புகளை பற்றியும் தஷின் பாரத் இராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பிரார் விளக்கமுடன் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தின் முக்கிய பங்கு நினைவுக்கூர்ந்து வேலூர் வீரபூமி என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி சிறப்புரையாற்றி வேலூருக்கு புகழாரம் சூட்டினார். நாட்டின் வளர்ச்சியிலும் பேரிடர் காலங்களிலும் நிவாரண பணிகளிலும் பாதுகாப்பு படைகளின் முக்கிய பங்குகளை விவரித்து விழாவில் சிறப்புரையாற்றினார். சுமார் 2000த்துக்கும் மேற்பட்டோர் முப்படை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஓய்வூதியதாரர்களின் அனைத்து குறைகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓய்வூதிய நிலுவைத் தொகையாக சுமார் ஒரு கோடி மதிப்பிலான வங்கி காசோலைகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவ்விழாவின் சிறப்பு அம்சமாக தாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினர்களை கௌரவிக்கப்பட்டனர். ஆண்டுக்கு ஒரு முறை உயிர் சான்று அடையாளம் காணுதல் ஆதார் புதுப்பித்தல் ஓர் ரேங்க், ஓர் பென்ஷன் சந்தேகங்கள் மற்றும் குறைகள் தீர்த்தல் ஸ்பேர்ஸ் விளக்கம் மற்றும் குறை தீர்ப்பு என பல்வேறு குழுக்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியில் நன்றியுரையாற்றி நாட்டுப் பண் பாடப்பட்டு பாரத் மாதா கி ஜெய் ஹிந்த் என மரியாதை செய்து விழா நிறைவுப்பெற்றது.