மார்த்தாண்டம் டிச 24
மார்தாண்டம் மேம்பாலத்தின் மேல் அனுமதியில்லா இடத்தில் ஆட்டோவை நிறுத்தி ஆட்களை ஏற்றுதல், இருசக்கர வாகனத்தில் மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள், இரு சக்கரவாகனத்தில் மூன்றுபேர் பயணம் செய்தவர்கள் ஆகிய வாகனங்கள் மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் நல்லசிவம் மேற்பார்வையில் மார்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்லசாமி மற்றும் காவல் ஆளினர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் வாகன தணிக்கையின் போது மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மேல் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தியவர்களையும், இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வாகனம் ஓட்டியவரையும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தவர்களையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அபராத தொகையை கட்ட வைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.