By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துர்நாற்றம் வீசும் ஏரி தூர்வாரும் பணியை பர்வையிட்ட அமைச்சர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > துர்நாற்றம் வீசும் ஏரி தூர்வாரும் பணியை பர்வையிட்ட அமைச்சர்
மாவட்டம்

துர்நாற்றம் வீசும் ஏரி தூர்வாரும் பணியை பர்வையிட்ட அமைச்சர்

Last updated: December 17, 2024 10:28 am
December 17, 2024
50 Views
Share
SHARE

ஊட்டி. டிச. 17.

  ஊட்டியில் உள்ள சுற்றுலா மையமான ஏரி கழிவுநீர் கலந்து துர்நாற்ம் வீசியதால் அதனை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.

அதனடிப்படையில்

உதகை படகு இல்ல ஏரியை ரூ.7 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன இயந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

படகு இல்ல ஏரி 45 ஏக்கர் பரப்பளவு  கொண்டுள்ளதால் முழுமையாக தூர்வார மேலும் நிதி தேவைப்படுவதால் முதலமைச்சரிடம் ஆலோசித்து பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தகவல்…

நீலகிரி மாவட்டம் உதகையில் முக்கிய சுற்றுலா தலமாக உதகை படகு இல்லம் திகழ்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் உதகை ஏரியில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஏரி 1823-ல் செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலையில், உதகை நகரில் கட்டப்படும் கட்டிடங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், வீடுகள், தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக உதகை ஏரியில் கலக்கிறது. 

மேலும் விவசாய நிலங்களில் இருந்து அடித்து வந்த மண்ணும் படிகிறது. 

ஆண்டிற்கு சுமார் 4 லட்சம் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் கோடப்பமந்து கால்வாயில் இருந்து கொண்டு வரும் தண்ணீரை அதிக அளவில் சேமிக்கவும் வலியுறுத்தி உதகை படகு இல்ல ஏரியை தூர்வார வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் உதகை படகு இல்ல ஏரியை தூர் வாரும் பணிகள் சுமார் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியுள்ளன. அதிநவீன இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஏரியில் படிந்துள்ள வண்டல் மண்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று உதகை படகு இல்ல ஏரியை தூர்வாரும் பணியை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் . அதன் அடிப்படையில் உதகை படகு இல்ல ஏரியை சுமார் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், 45 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த ஏரியை முழுமையாக தூர்வார மேலும் நிதி தேவைப்படுவதால் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று ஆலோசனை மேற்கொண்டு ஏரியை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். தற்போது நடைபெற்று வரும் பணிகள் இரண்டு மாதத்திற்குள் முடிவடையும் என்றும் ஏரியை 8 மீட்டர் ஆழத்திற்கு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – NEET (UG) 2025-ற்கென, சிவகங்கை மாவட்டத்தில் 04 மையங்களில் நடைபெறும் .
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
பரமக்குடியில் தூய்மை சேவை -2024 மினி மாரத்தான் போட்டி
ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் 74 வயதான முதியவருக்கு முதல் முறையாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 2, 2024
96 Views
அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
கேரளாவுக்கு கடத்திய 1000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்த அதிகாரிகள்
அம்பேத்கரின் பிறந்தநாள் அரசியல் கட்சி மரியாதை
நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு: 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account