திருவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலை தமிழ்மன்றம், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்துடன் இணைந்து, “திசைகாட்டும் பாரதி – 24” என்ற தலைப்பில், தமிழ் பன்னாட்டு கருத்தரங்கு பல்கலை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வே. வாசுதேவன், மாணவர் நல இயக்குநர் முனைவர் சாம்சன் நேசராஜ் முன்னிலை வகித்தனர்.
பல்கலை தமிழ் மன்றத் தலைவர் முனைவர் சி. சங்கீதா வரவேற்றார்.
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க, பொதுச் செயலாளர் முனைவர் இதயகீதம் இராமானுஜம் நோக்கவுரை வழங்கினார். ” பாரதி தம் பாடல்களில் கூறும் வழிகாட்டுதலை இக்கால இளைஞர்களுக்கு கூறி முன்னேற்றுதலும், தமிழ் பற்றை வளர்ப்பதும், பரப்புவதும் இக் கருத்தரங்கின் நோக்கம் என்றார்.
வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையுரையில், பாரதி கவிதைகளைப் படித்து அது போல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றார்.
விழாவில், தமிழ்தொண்டை பாராட்டி வேந்தருக்கு ”தமிழ் சுடர்” விருதை முனைவர் இராமானுஜம் வழங்கினார்.
அமெரிக்கா, வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், டாக்டர் காயத்ரி இளையராஜா, தமிழ்நாடு மேனாள் கூடுதல் மக்கள் தொடர்பு இயக்குநர் டாக்டர் ஜெய ஸ்ரீ கிஷோர், சென்னை, ஆப்பிரிக்கா, தமிழ்ச்சாரல் ஆசிரியர் இராசகுரு கார்பாலன், ஆகியோருக்கு ”தமிழ் சுடர் விருதை”யும் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களையும் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் வழங்கினார்.
தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் ரா. இலக்கிய சுடர் ராஜமாணிக்கம், தத்துவம், கலை, மாதர், போன்ற வெவ்வேறு தலைப்புகளில் 97 கட்டுரைகள் கருத்தரங்கிற்கு கிடைக்க பெற்றுள்ளன என்று பேசினார்.
அமெரிக்கா, செய்தி வாசிப்பாளர், டாக்டர் காயத்ரி பேசுகையில், ”பெண் விடுதலை பற்றி குறிப்பிட்ட பாரதி தன் மனைவியை வெளியே அனுப்பவில்லை. பின்பு பாண்டிசேரி, நிவேதிதா தான் பாரதியை மாற்றி கண்ணம்மாவை வெளியே கூட்டி சென்றார். பாரதி போல் தவறு செய்தாலும் பின்பு அதனை உணர்ந்து திருந்தி கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
ஆப்பிரிக்கா, தமிழ்ச்சாரல் ஆசிரியர் இராசகுரு கார்பாலன், பாரதியின் பொதுவுடைமை என்ற தலைப்பில் பேசினார்.
முனைவர் ஆர். பூங்கோதை, பேராசிரியர் முனைவர் கமலா முருகன், கவிஞர் கோவி பழனி, ஆகியோர் பாரதியின் முற்போக்கு கருத்துக்களை விவரித்தனர்.
117 தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள். ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.
கவிஞர் ஆரோக்கிய ராசு நன்றி கூறினார்.
பேராசிரியர்கள் சி. சங்கீதா, கு. பிரபாகர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க தமிழறிஞர்கள் ராமகுருநாதன், பெரியண்ணன், இராமானுஜம் ஆகியோர் கருத்தரங்கை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.