தென்தாமரைகுளம்.,டிச.11, தமிழ்நாடு வனத்துறை மற்றும்
புலம்பெயர் பறவைகள் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் அறிவுறுத்தலின் பேரில்
கன்னியாகுமரி அருகே உள்ள துவாரகாபதி கடற்கரையில்
ஆமைகள் முட்டையிடும் பகுதிகள் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை நடைபெற்றது. இதில் நாகர்கோவில் இந்து கல்லூரி பொருளாதாரத்துறை மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கடற்கரையில் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளை சுத்தம் செய்தனர். பின்னர் நடந்த விழிப்புணர்வு அமர்வில் நெகிழி பைகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் ஆமைகளின் பிரதான உணவு ஜெல்லி மீன்களாகும். நாம் தூக்கி போடும் நெகிழி பைகள் கடலிலே மிதக்கும் போது ஜெல்லி மீன்கள் என்று நினைத்து அதை உண்ணும் போது குடலில் சிக்கி ஆமைகள் உயிரிழப்பதற்கு காரணமாகிறது மற்றும் அவை முட்டையிடும் மணல் தேரிகளை பாதுக்காக்கவேண்டி அவசியம் குறித்தும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
புலம்பெயர் பறவைகள் ஆராய்ச்சி நிலைய நிர்வாக இயக்குனர் முனைவர் எஸ்.பாலச்சந்திரன்,
பூதப்பாண்டி ரேஞ்ச் வனவர் அசோக், கீல் தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவை வஸ்தியான், கலைமாமணி பழனியாபிள்ளை, சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் செ.சுதாமதி,
நாகர்கோவில் இந்து கல்லூரி, பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர், முனைவர் ஆர்.தங்கஷீலா,
புலம்பெயர் பறவைகள் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் ரித்திகா, முருகேசன் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.