கோவை டிச:07
கோவை மாவட்டம் நவ இந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன் துணை மேயர் வெற்றிச்செல்வன் துணை ஆணையாளர் சிவகுமார் காணொளி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளங்செல்வி கார்த்திக்,மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, வடக்கு மண்டல தலைவர், கதிர்வேல் பொது சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர் கல்லூரி தாளாளர் சரஸ்வதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் மற்றும் நலத்திட்ட பயனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.