நாகர்கோவில் – டிச – 05,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த ஸ்பர்ஜன் சாமுவேல் (52) என்பவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டார் சாரிட்டபிள் எஜுகேஷன் டிரஸ்ட் தலைவராகவும் நிர்வாக அறங்காவலராகவும் பதவி வகித்து வருகிறேன். மேலும் நிலம் வாங்கி விற்க்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறேன். என்னிடம் சில வருடங்களுக்கு முன்பு கீழ்பால் கிணற்றான் விளையை சேர்ந்த இருவர் நில புரோக்கர்களாக என்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் தரும் தகவல்கள் மூலம் விலைக்கு வாங்குகின்ற , மற்றும் விற்ப்பனை செய்யபடுகின்ற இடங்களுக்கு அவர்கள் முறையான கமிஷன் தொகையினை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 28.11.2024 அன்று மாலை 5 மணி அளவில் எனது பள்ளி பேருந்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என வட்டார போக்கு வரத்து அதிகாரி வாகனத்தை சிறை பிடித்தார். நான் உடனே என்னுடைய மேலாளரை வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்க்கு அனுப்பி எனது வாகனத்திற்க்கு கட்ட வேண்டிய அபராத தொகையினை செலுத்தி என்னுடைய பள்ளிப் பேருந்தை விடுவித்து வந்தேன் . மேலும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி என் மீது ஒரு புகார் வந்துள்ளது என கூறியுள்ளார். என்ன புகார் என்று பார்க்கும் போது தூத்துகுடியை சேர்ந்த ஒருவர் என் மீது ஒரு புகார் மனு அளித்துள்ள தாக தெரியவந்தது. அதன் பின் எனக்கு தெரிந்த தூத்துகுடி பகுதியை சேர்ந்த நண்பர் மூலம் விசாரித்ததில் என் மீது அவர் புகார் அளிக்க வில்லை என்றும் எனது பெயரில் என்னிடம் வேலை பார்த்த இருவரும் தான் புகார் மனு தயார் செய்து அனுப்பினார்கள் என கூறினார்.
அதற்க்கு நான் என்னுடைய நண்பர் மூலம் அவரிடம் பேசி என் மீது போலியாக கொடுத்த புகார் மனுவை திரும்ப பெறும்படி கூறினேன் அதன் பின் என் நண்பருக்கு அந்த நபர் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்பர்ஜன் சாமுவேல் ரூ. 25 லட்சம் கொடுத்தால் மட்டும் தான் புகார் மனுவை திரும்ப பெற முடியும் என்றும் ஸ்பர்ஜன் சாமுவேல் மீது பொய் புகார் கொடுத்து போடப்பட்ட வழக்கையும் வாப்பஸ் வாங்குவதாகவும் கூறியதாகா அந்த நபர் எனது நண்பரிடம் கூறியுள்ளார். அதற்க்கு உண்டான ஆடியோ ஆதராமும் தன்னிடம் உள்ளது . மேலும் 29.11. 2024 அன்று நான் வடசேரி வன அலுவலகம் முன்பு நின்று கொண்டிருக்கும் இப்போது எனது எதிரிகளான இருவரும் இருசக்கர வாகனத்தில் என்னன இடிப்பது போல் வந்தனர். இது சம்மந்தமாக வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை ஆகயால் மாவட்ட காவல் கண்காணிப்பளரிடம் என் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு என்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்யும் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.