மதுரை நவம்பர் 27,
மதுரை ஆளாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் கைப்பேசியில் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம்
வரவேற்புரை வழங்கினார் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான சங்கர் DSW HUB TEAM மதுரை மாணவர்களுக்கு சிறந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அதிகம் கைப்பேசி பயன்படுத்துவதனால் மாணவர்களுக்கு ஏற்படும் உடல்நிலை பிரச்சினைகள் மற்றும் மனநிலை எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்றும் முக்கியமாக இப்பொழுது இருக்கும் மாணவர்கள் அனைவரும் அதிகம் கைப்பேசி பயன்படுத்துவதனால் கண் குறைபாடு ஏற்படுகிறது மன சோர்வு ஏற்படுகின்றது இதனால் நாம் கைபேசியை உபயோகிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும் நிகழ்ச்சி நிறைவில் அரசு நடுநிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் விஜயராணி நன்றியுரை வழங்கினார்.