நாகர்கோவில் – நவ – 26,
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அடுத்த லெட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் ஆலிவர் அலெக்ஸ் (31) இவர் திங்கள் சந்தை, அருமனை , நாகர்கோவில், மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் ஆலிவர் சிக்னேச்சர் லேன்ஜ் (சலூன் கடை ) போன்ற அழகு நிறுவனங்களை கடந்த எட்டு வருடங்களாக நடத்தி வருவதாகவும் மேற்ப்படி தொழில் ஸ்தாபனங்களை விரிவுபடுத்தவும் சீர் செய்ய வேண்டியும் பல நபர்களிடம் பணம் கடனாக பெற்றும் வந்துள்ளதாகவும் . வாங்கிய கடனை முறையாக செலுத்தி வராத நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பைனான்சியர் மகேஷ் இடம் கடந்த ஆறு மாதங்களுக்கு இரண்டு தவணைகளாக ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டு இது நாள் வரையிலும் பணத்தை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த மகேஷ் கடன் தொகையை திரும்ப கேட்டு வழக்கறிஞர்களுடன் வந்திருப்பதை அறிந்த ஆலிவர் அலெக்ஸ் கடையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானதை தொடந்து வெட்டூர்ணிமடத்தில் உள்ள அவரது கடையை மகேஷ் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது . சம்பவம் அறிந்த வடசேரி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) இசக்கி துரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து இரு தரப்பு வழக்கறிஞர்களுடன் சுமூக பேச்சு வார்த்தை நடத்தினர். பின்பு இரு தரப்பினரும் சம்பவ இடத்திலிருந்து கலைந்து சென்றனர். ஏராளமான வழக்கறிஞர்களும் போலீசாரும் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.