நீலகிரி. நவ. 22.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகிறது. நிழலுக்காகவும் விறகுக்காகவும் வளர்க்கப்படும் மரங்கள் முதிர்ந்த நிலையில் குடும்ப தேவைக்காக விவசாயிகள் இதனை விற்பனை செய்து வருகின்றனர். குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கும் மரங்களை வியாபாரிகள் மேட்டுப்பாளையம் மற்றும் உள்ளூரில் உள்ள சாமில்களில் அதிக விலைக்கு விற்று லாபம் பெற்று வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க கோத்தகிரி கீழ்கோத்தகிரி மற்றும் கட்டபெட்டு பகுதிகளில் வருவாய் துறைக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்படு மரங்கள் விதிமீறி வெட்டி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில் விவசாயிகளின் பொருளாதார கட்டுப்பாட்டை அறிந்து மரவியாபாரிகள் குறைந்த விலைக்கு மரங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் அடைகின்றனர். அதில் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலங்களில் வளர்க்கப்படும் மரங்கள் வனத்துறையின் விதிகளை மீறி வெட்டி கடத்தப்படுகிறது. இதனை உயர் அதிகாரிகள் உடனடியாக கண்காணித்து இது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் விவசாய நல சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தும்பூர் போஜன் அறிவித்துள்ளார்.