கந்திலி:நவ:15, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திமுக கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் K.A. குணசேகரன் பி.ஏ.,பி.எல்., தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, தேர்தல் மேற்பார்வையாளர் மற்றும் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் G.ரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில், எதிர்வரும் 2026 தேர்தலை எதிர்கொள்வது, வாக்காளர்களின் பெயர் பதிவு செய்தல், நீக்குதல் ஆகிய செயல்பாடுகளை ஆலோசித்து பேசினார்கள். பவள விழாவினை சிறப்பாக கொண்டாடுதல் மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மற்றும் கழகத் தலைவரின் ஆலோசனையின் படி ஒன்றியத்தில் சிறப்பாக செயலாற்றும் திமுக தொண்டர்கள், ஒன்றிய பொறுப்பாளர்களை ஊக்குவித்தல், தேர்தல் பணிக் குழுக்களை பலப்படுத்துவது. மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக முன்னெடுத்தல் ஆகிய தீர்மானங்களை ஆலோசித்து பேசினர். ஒன்றிய செயலாளர் பேசுகையில்: திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொண்டர்களிடையே சென்று மக்களை சந்தித்து மூன்று ஆண்டுகால நல்லாட்சியின் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். கந்திலி மத்திய ஒன்றியத்தின் பொறுப்பாளர்கள் சிறந்த செயல் வீரர்களாக இருக்க வேண்டும் எனவும் நமது ஒன்றியம் முன்மாதிரியான ஒன்றியமாக திகழ வேண்டும் என்று அறிவுறுத்தி பேசினார். இக்கூட்டத்தில் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர்S.மாது பி.காம்.பி.எல், ஆசிரியர் S. சண்முகம், தீபா, ஒன்றிய பொருளாளர் K.M. சக்கரை, மாவட்ட பிரதிநிதிகள் N. சக்கரவர்த்தி,T. ஆர்வில், S. சசிகுமார், தொண்டரணி D.செந்தில்குமார், வர்த்தக அணி லயன்ஸ் சரவணன், D.வீரமணி, ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு P.பாலு, IT WING சக்திவேல் ஸ்டாலின், தேர்தல் பணிக்குழு தமிழரசன் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பொறுப்பாளர்கள், BL 2 பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் கந்திலி மத்திய ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் எஸ்.மாது நன்றியுரை வழங்கினார்.



