விழுப்புரம், ஆகஸ்ட் 29 –
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம், ஏழை, எளிய மக்களின் மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக்கொடுத்து நலமுடன் வாழ்வதற்கு வழிவகை ஏற்படுத்திக்கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்த பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் சுகாதாரத்துறையில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 18, கலைஞரிகள் வரும்முன் காப்போம் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள். இதன் தொடர் நிகழ்வாக, தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களின் வசிப்பிடப்பகுதியிலேயே உயர்தர மருத்துவ சேவையினை வழங்கிடும் விதமாக “நலம் காக்கும் எப்டாலின்” திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார்கள்.
அதனடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் எஸ்டாலின்” திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம். பேறுகால மருத்துவம். குழந்தை நல மருத்துவம், இதயநல மருத்துவம், நரம்பியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய்கான மருத்துவம். தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், சித்தா மருத்துவம், உணவியல் ஆலோசணை ஆகிய 17 மருத்துவ சிகிச்சைகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களால் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாமில் அனைத்து சிகிச்சைகளும் பரிசோதனைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள். படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுதிறனாளிகள இலக்காக கொண்டு இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், 02.08.2025 முதல் தொடங்கி 01.11.2025 வரை 13 வட்டாரங்களிலும் (வட்டாரத்திற்கு தலா 3 முகாம்கள் வீதம்) 39 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் சிறப்பா முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் முகாம் வாயிலாக தற்பொழுதுவரை முதல் வாரம் (ஆகஸ்ட் 2)44,795 மருத்துவ பயனாளிகளும், இரண்டாம் வாரம் (ஆகஸ்ட் 9) 48,046 மருத்துவ பயனாளிகளும், மூன்றாம் வாரம் (ஆகஸ்ட் 23) 56,245 மருத்துவ பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் வாயிலாக 6000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் முகாம் மூலம் பயன்பெற்ற மருத்துவ பயனாளி செங்கோல் மே அவர்கள் தெரிவிக்கையில், “நான் விழுப்புரம் வட்டம், சிறுவந்தாடு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு நீண்ட காலமாக காதுகேட்பதில் சிரமம் இருந்து வந்தது. இதற்கு சிகிச்சை பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தாலும், மருத்துவ செலவினம் மேற்கொள்வதற்கான நிதி ஆதாரம் எங்களிடம் இல்லை. மேலும், காதுகேளாமையால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தேன். இச்சமயத்தில் தான் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் முகாம் வாயிலாக அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்னப்பட்டு தேவையான மருத்துவ உதவிகள் கட்டணமின்றி செய்துகொடுக்கப்பட்டு வருவதை அறிந்தேன். அந்த வலகயில், கான்டமங்கலம் ஒன்றியம் கெங்கராம்பாளையம் ஊராட்சியில், IFET பொறியியல் கல்லூரியில் “நலம் காக்கும் எஸ்டாலின்” திட்டம் முகாமில் கலந்துகொண்டு, காதுகேளாமைக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டேன்.
மருத்துவர்கள் காதுகேளாமைக்கான காரணம் குறித்து கேட்டறிந்ததுடன் சிறப்பாக மருத்துவ பரிசோதை மேற்கொண்டதுடன் மேல்சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தொடர் சிகிச்சை வழங்கினால் கட்டாயம் காதுகேளாத பிரச்சனை சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்கள். மேல் சிகிச்சை வழங்கப்படும் நான் குறித்து தெரிவிப்பதாக தெரிவித்தார்கள். இதுமட்டுமல்லாமல் இம்முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு உடல்நிலை குறித்து அறிந்துகொண்டேன். இதுபோன்ற சிறப்புத் திட்டத்தினை செயல்படுத்தி ஏழை, எளிய மக்களின் மருத்துவ தேவையினை நிறைவேற்றிக்கொடுத்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்”.
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் முகாம் மூலம் பயன்பெற்ற மருத்துவ பயனாளி ஏழுமலை அவர்கள் தெரிவிக்கையில், “நான் சின்னபாபு சமுத்திரம், தாண்டவமூர்த்தி குப்பம் பகுதியில் வசித்து வருகிறேன். என்னுடைய வயது 65, எனக்கு நரம்புத்தளர்ச்சி பாதிப்பு இருக்கிறது. இதனால் கை மற்றும் கால்கள் அதிகளவில் நடுக்கம் ஏற்படும். இப்பாதிப்பினால் என்னுடைய அடிப்படை தேவைகளை நானே செய்து கொள்வதில் மிகவும் சிரமப்பட்டு வருவதுடன் பிறரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இருந்து வந்தேன். இதற்கான மருத்துவம் பார்ப்பதற்கும், செலவு செய்வதற்கும் என்னால் இயலாத நிலை இருந்து வந்தது. அப்பொழுதுதான் IFET பொறியியல் கல்லூரியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் முகாமில் அனைத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்கள். நானும் இம்முகாமில் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டேன். மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு நரம்புத்தளர்ச்சிக்கான மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கியதுடன் வாரந்தோறும் சத்து ஊசி செலுத்த வேண்டும் எனவும், மக்களைத் தேடி மருத்துவம் மூலம் செவிலியர்கள் தங்கள் பகுதிக்கே வருகை புரிந்து சிகிச்சை மேற்கொள்வார்கள் என தெரிவித்ததோடு ஓரிரு மாதங்களில் நரம்புத்தளர்ச்சி பாதிப்பு குறைந்து விடும் என தெரிவித்தார்கள். இதனை கேட்டு மனமகிழச்சியடைந்தேன். இதுபோன்ற முகாமினை நடத்தி ஏழை, எளிய மக்களின் உடல்நலனை பாதுகாப்பதில் கவளம் செலுத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்”.



