ஈரோடு, ஜூன் 18 –
ஈரோடு மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது. தாளவாடியில் நடந்த ஜமாபந்தியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஈரோடு தொடங்கி வைத்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதை தொடர்ந்து ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஈரோடு கோட்டாட்சியர் சிந்துஜா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. அவர் பொது மக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 46 மனுக்களை பெற்றார். இதில் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான உத்தரவு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு தாசில்தார் முத்து கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வருகிற 23 ந் தேதி வரை இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.



