நாகர்கோவில் – நவ – 11,
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் – அழகியமண்டபம் செல்லும் சாலை பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத அளவிற்க்கு சாலையில் குண்டு குழிகள், மரணத்தை ஏற்படுத்தும் பாதாள பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. தினமும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அரசு , மற்றும் தனியார் நிறுவனங்கில் பணிபுரிபவர்கள் , அத்தியாவசிய தேவைக்கு செல்லும் பொதுமக்கள் , மருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகள் , அவசர ஊர்தி போன்ற வாகனங்கள் இந்த சாலையில் தான் பயணிக்க வேண்டி உள்ளது. இந்த சாலையில் தான் பல கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தீயணைப்பு நிலையம், மற்றும் குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ மனையும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது . மருத்துவமனைகளுக்கு அவசர நோயாளிகளாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்பவர்கள் அமரர் ஊர்தியில் தான் திரும்பி வரும் அவல நிலைக்கு அப்பகுதி பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இச்சாலையின் அவலநிலையை குறித்து தினம், தினம், இணையதளத்தில் அப்பகுதி இளைஞர்கள் பல்வேறு விதமான மீம்ஸ் கேலி வீடியோக்கள் வெளியிட்டும் மாவட்ட நிர்வாகமோ ! சட்டமன்ற உறுப்பினர்களோ , பாராளுமன்ற உறுப்பினரோ அப்பகுதி பொதுமக்களின் நிலையை கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே செயல்படாமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள், மற்றும் போராட்டங்கள் பொதுமக்களை ஒன்று திரட்டி முன்னெடுக்கப் போவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.