களியக்காவிளை, நவ – 5
கன்னியாகுமரி மாவட்டத்தில் குமாரகோவில் மையமாக வைத்து சின்மய மிஷன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீமத் பகவத் கீதா பாட்டும் பொருளும் ஒப்புவிக்கும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பள்ளிகளில் நடந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க இயலும் .மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்க இயலும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த மாவட்ட அளவிலான போட்டியில் ஸ்ரீமத் பகவத் கீதை 5-ம் அத்தியாயம் ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணங்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இயலும்.
குமரி மாவட்ட அளவிலான ஸ்ரீமத் பகவத் கீதா போட்டி தக்கலை பார்த்தசாரதி கோயில் வளாக தனியார் மண்டபத்தில் நடந்தது.காலை பெயர் பதிவு செய்தல், நடுவர்கள் கலந்துரையாடல் நடந்தது. தொடர்ந்துபள்ளி முதல்வர்கள் திருவிளக்கு ஏற்றி வைத்தனர். தர்ஷினி இறைவணக்கம்
பாடினார்.. விஜயலெட்சுமி வரவேற்றார். கோயம்புத்தூர் சின்மய மிஷன் பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா ,சுவாமி வேதா நிஷ்டா னந்தா, நீலகண்டசைதன்யா, ஹரிஷ் ,சிவா, வெள்ளிமலை. ஹிந்து தர்ம வித்தியா பீடம் சுவாமி சைதன்யானந்தஜி மஹாராஜ் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து ஸ்ரீமத் பகவத் கீதா ஒப்புவித்தல் போட்டிகள் நடந்தது.. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.. பரிசளிப்பு விழாவில் மாணவன் அபினவ் இறைவணக்கம் பாடினார்.பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா, வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம சுவாமி சைதன்யானந்த மஹாராஜ் ஹரிஷ், ஜெயசேகர், விஜி உள்ளிட்டோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குபரிக்கள் வழங்கினர். சுழற்கோப்பை கன்னியாகுமரி அமிர்த வித்தியாலாயா பள்ளிக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா நன்றி கூறினார். மாநில அளவிலான ஶ்ரீமத் பகவத் கீதா ஒப்பு வித்தல் போட்டியானது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வைத்து வரும் ஜனவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது.