அழகப்பா கல்லூரி மாணவர்கள் தொண்டி அஹமது யாசின் ராகுல் முதல் பரிசு பெற்று அசத்தல்!
ராமநாதபுரம், நவ.5-
ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு இறகுப்பந்து விளையாட்டு போட்டி தமுமுக ஸ்போர்ட்ஸ் கிளப் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தொண்டி ராலி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் தமுமுக மாநில செயலாளர் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி எம் சாதிக் பாட்ஷா தலைமையில் நடைபெற்றது.
இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழாவில்
தொண்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி வரவேற்றார். ரஹ்மத்துல்லாஹ் தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் எல்ஆர்சி ராஜசேகர் பாரத் பவர் ஜிம் ஆனந்த் டாப் டெக்ஸ் முகமது பைசல் தமுமுக செயலாளர் முகமது மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் ஆட்டத்தை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் குமார் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி லியாகத் அலி தொடங்கி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான போட்டியில் அழகப்பா கல்லூரி மாணவர் தொண்டி அகமது யாசின், ராகுல் முதலிடமும் பரமக்குடி கல்யாண் கந்தவேல் இரண்டாம் இடமும் மூன்றாம் இடம் தொண்டி சதீஷ் பாலா பரமக்குடி தவனேஸ் ஸ்டீபன் ஆகியோர் பெற்றுனர்.
மாநில அளவிலான ஓபன் போட்டியில் காரைக்கால் சச்சின் மனுநீதி முதலிடமும் திருச்சி லோகேஷ் தர்மா இரண்டாம் இடமும் காரைக்குடி வீரபாண்டி மணிரத்தினம் கம்பம் குரு தாமரை மூன்றாம் இடமும் பெற்றனர். மாநில அளவிலான 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான விளையாட்டில் முதலிடம் கம்பம் கபீர் இளையராஜா இரண்டாம் இடம் காரைக்கால் அப்துல் ரஹீம் ஹபீப் மூன்றாம் இடம் சென்னை கிறிஸ்டோபர் கந்தவேல்
காதர் குமார் ஆகியோர் பரிசு பெற்றனர். இப் போட்டிகளில் 60க்கும் மேற்பட்ட மதுரை கம்பம் திருநெல்வேலி திருச்சி காரைக்குடி கன்னியாகுமரி சென்னை பாண்டிச்சேரி காரைக்கால் புதுக்கோட்டை அறந்தாங்கி பட்டுக்கோட்டை ராமநாதபுரம் பரமக்குடி தொண்டி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான அணிகள் பங்கு பெற்றன. போட்டியின் சிறப்பு அழைப்பாளராக இறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்து பரிசளித்த திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ராம கருமாணிக்கம், ஒன்றிய பெருந்தலைவர் முகமது முக்தார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, ஒன்றிய செயலாளர் ராஜாராம், நம்புதாளை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச்செல்வி ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்
சுமதி முத்துராக்கு , வாழ்த்துரையாக பொறியாளர் எம்எம் அபூபக்கர் அப்துல் ரவூப் நிஸ்தார் வட்டாரா ஐக்கிய ஜமாத் தலைவர் அய்யூப் கான் . செயல் அலுவலர் செய்யது அலி மனிதநேய மக்கள் கட்சி பேரூர் செயலாளர் பரக்கத் அலி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக விளையாட்டு அணி தலைவர் காதர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தமுமுக விளையாட்டு அணி தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டு வீரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.