தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக த்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வருகின்ற 2026- ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன், நகர கழக செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, சண்முகம், முல்லைவேந்தன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.