மண்டலமாணிக்கம் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்ககோரிக்கை கமுதி . ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியனில் உள்ள பஞ்சாயத்துகளில் பெரிய ஊராட்சி மண்டலமாணிக்கம் ஊராட்சியாகும் இதில் ஆரம்பசுகாதார நிலையம் கடந்த 5வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகின்றது கடந்த 4வருடமாக நன்றாக செயல்பட்டு வந்தது மருத்துவமனை மண்டலமாணிக்கத்தை சுற்றியுள்ள சுமார் 30கிராமமக்கள் வந்து பயன்பெற்றனர் கமுதி கண்ணார்ட்டி கோட்டைமேடுபகுதியில் இருந்து கூட ஆட்டோவில் சென்று மருத்துவம் பார்த்துவந்தனர் கடந்த ஓராண்டுக்கு முன்பு இங்குபணியில் இருந்த மதுரைடாக்டர் மாறுதலாகிசென்றார் அதன் பிறகு வந்தவர்கள் தினசரி வருவதில்லை வாராம் 2 நாள் 3 நாள் மட்டுமே டாக்டர் வந்துசெல்வதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர் இங்குள்ள நர்சுகள் வரும் நோயாளிகளை கமுதி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனராம் கமுதியிலே மருத்துவர்கள் இல்லை இதனால் சொல்லமுடியாதஅளவிற்கு பெரும் இன்னல் அடைவதாக நோயாளிகளும் இந்தபகுதி பொதுமக்கள் தெரிவித்தனர் அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மண்டலமாணிக்கம் அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக தங்கி இருக்கும்வகையில் இந்தபகுதி பொதுமக்களின் நலன்கருதி டாக்டரை நியமிக்கவேண்டும் அரசுமேலும்காலதாமதம் செய்தால் அடுத்தமாதம் போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்துள்ளனர் ஆகையால் அரசும் மாவட்டநிர்வாகமும் தூரித நடவடிக்கை எடுத்து மண்டலமாணிக்கம் அரசுமருத்துவமனைக்கு டாக்டரை நியமிக்கவேண்டும் என்பதே இந்த பகுதி நோயாளிகளின் கோரிக்கைஆகும்



