கோரம்பள்ளம் கண்மாய் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக உப்பாத்து ஓடையில் வரக்கூடிய வெள்ள நீரை மடைமாற்றம் செய்து செயல்படாத கல்குவாரிகளில் சேமிப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத்,இ,ஆ,ப., அவர்கள் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், கீழத்தட்டப்பாறை ஊராட்சிப் பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர்(திட்ட வடிவமைப்புக் கோட்டம், திருநெல்வேலி) மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் சுபாஷ், ஸ்ரீராம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



