ஆம்பூர்,அக்:18-
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் மழை வெள்ள பாதிப்பு முன்னேறுப்பாக மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதில் புதுமனையில் குதிரை கால்வாய் வழியாக செல்லும் மழைநீர் பாதையை பார்வையிட்டு மேலும் ஆம்பூர் வட்டாட்சியர்.சி.
ரேவதி.அவர்களிடம் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு விவரங்களை எடுத்துக் கூறினார் அவர்களுக்கு காலி மனை இடம் கொடுக்க சொல்லியும் உடனடியாக வீடு கட்டி கொடுக்கப்படும் நேரில் வலியுறுத்தி தெரியப்படுத்தினார்.
பின்னர் அம்பேத்கார் நகர் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பகுதியை பார்வையிட்டார்.
இதில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சேதாரம் விபரங்களை தெரிந்து கொண்டு மக்களிடம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
அப்போது துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவரிடம் கால்வாய் தேக்கம் சுகாதாரம் குறித்து அறிவுறுத்தினார் மேலும் இந்நிகழ்வில்.தி மு க
மாதனூர் மத்திய ஒன்றிய செயலாளர். எம்.டி.சீனிவாசன் அவர்கள் மற்றும் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மணவாளன்.
துத்திப்பட்டு வருவாய் ஆய்வாளர்.ஆ.நித்தியானந்தம்,
கிராம நிர்வாக அலுவலர். அருள்ராஜ்
மற்றும்
அவை தலைவர்.சிவகுமார்
துணைச் செயலாளர்.சேகர் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்.சுவிதா கணேஷ் துணைத்தலைவர் விஜய் ஊராட்சி செயலாளர். பாலகிருஷ்ணன்.
துத்திப்பட்டு வார்டு உறுப்பினர்கள். பவானி விஜய் குமரேசன் தம்பிதுரை ஜெயந்தி ராமமூர்த்தி தம்பி சுப்பிரமணி அண்ணாதுரை மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.